மத்திய மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய பல பஸ்களுக்கு அபராதம்!

மத்திய மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய பல பஸ்களுக்கு அபராதம்!

மத்திய மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 42 பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் அதிகரித்து வரும் கொவிட் தொற்று காரணமாக பஸ்களில் மட்டுப்படுத்தப்பட்ட பயணிகள், சமூக இடைவெளி, முககவசம் அணிந்திருத்தல் போன்ற கொவிட் 19 சுகாதார விதிமுறைகளை பேணவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

எனினும் சில பஸ்களில் அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்லுதல், சமூக இடைவெளி பேண வேண்டும் என்ற சட்டத்திட்டங்களுக்கமைவாக பஸ் சேவைகள் இயங்கிக்கொண்டுள்ளபோதும் விதிகளை மீறிய 42 பஸ்கள் விசேட பொலிஸ் பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களுக்கு மூன்று நாட்களில் ரூபா 4200.00 அபராதப் பணம் செலுத்த வேண்டும் என தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் இருந்து புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்லும் பஸ்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி பயணிகள் அழைத்துச் செல்வதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தெல்தொட்ட, ரிக்கிலகஸ்கட, பதியபெலல்ல, திகன, ஹதரலியத்த, ரங்கல, பொத்தபிட்டிய மற்றும் ரெட்டியாகாமா உள்ளிட்ட 42 பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.