இலங்கையில் கொரோன நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர்!

இலங்கையில் கொரோன நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர்!


இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்டிரோஸ் அட்னகொம் கெப்ரயோசிஸ் சுட்டிகாட்டியுள்ளார்.


ஜெனீவாவில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில், இதனை குறிப்பிட்டுள்ள அவர் இந்தியாவில் காணப்படும் நிலவரம் பெரிதும் கரிசனையளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.


அவசர உதவி தேவைப்படுவது இந்தியாவிற்கு மாத்திரமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


நேபாள் இலங்கை வியட்னாம் கம்போடியா தாய்லாந்து போன்ற நாடுகள் கொரோன நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பை எதிர்கொண்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் ஏற்கனவே 3.3 மில்லியன் உயிர்களை பலி கொண்டுள்ளது, கடந்த வருடத்தை விட இந்த வருடம் கொரோனா வைரஸ் அதிகளவு உயிராபத்தை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


பொதுசுகாதார நடைமுறைகள் தடுப்புமருந்துகளை இணைத்து உயிர்களை பாதுகாப்பதும் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதுமே தற்போது ஒரே வழிமுறையாக காணப்படுகின்றது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகம் சவாலாக உள்ளது, இந்த வாரம் இதற்கான தீர்வுகள் குறித்து ஆராயப்படுகின்றது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.