சீன கொரோனா தடுப்பூசியான “சயனோஃபார்ம்” இலங்கையில் தயாரிக்க அனுமதி!

சீன கொரோனா தடுப்பூசியான “சயனோஃபார்ம்” இலங்கையில் தயாரிக்க அனுமதி!

கொரோனாவைக் கட்டுப்படுத்த சீனாவில் தயாரிக்கப்பட்ட 'சயனோஃபார்ம்' தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நேற்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

தடுப்பூசிகளை நாட்டில் தயாரிப்பதற்காக சீன சினோவாக் பயோடெக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

உள்நாட்டில் தயாரிக்கப்படவிருக்கும் தடுப்பூசியை ஐந்து வருட காலத்திற்கு கொள்வனவு செய்ய அரச மருந்தகம் முன்மொழிந்துள்ளது.

தடுப்பூசிகள் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது எதிர்காலத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.