மூடப்பட்டிருக்கும் பாடசாலை தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவிப்பு!

மூடப்பட்டிருக்கும் பாடசாலை தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவிப்பு!


பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப் பகுதியில் இணையத்தளத்தின் ஊடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய ஈ தக்சலா, குருகெதர வேலைத்திட்டங்களின் மூலமாக மாணவர்கள் பயனடைய முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னரும் குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

பாடவிதானங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாத விடுமுறையை மட்டுப்படுத்துவது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post