புதிய சட்டமா அதிபராக தமிழனான சஞ்சய் ராஜரத்தினத்தினை நியமிக்க அனுமதி!

புதிய சட்டமா அதிபராக தமிழனான சஞ்சய் ராஜரத்தினத்தினை நியமிக்க அனுமதி!


பதில் சொலிஸிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினத்தினை புதிய சட்டமா அதிபராக நியமிக்க நாடாளுமன்றப் பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.


சட்டமா அதிபராக செயற்பட்ட தப்புல டி லிவேராவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.


அதற்கமைய, பிரதி மன்றாடியார் நாயகம் சஞ்சய் ராஜரத்தினத்தினை சட்டமா அதிபராக நியமிக்க நாடாளுமன்றப் பேரவைக்கு ஜனாதிபதியினால் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.


இதன்படி நாடாளுமன்றப் பேரவை ஜனாதிபதியின் தீர்மானத்துடன் இசைந்து செல்ல முடிவு செய்துள்ளது.


அவர், இலங்கை சோசலிச குடியரசாக அறிவிக்கப்பட்டதன் பின்னர், இலங்கையின் சட்டமா அதிபராக பதவி ஏற்கவுள்ள 3ஆவது தமிழரும், 4ஆவது சிறுபான்மையினருமாவார்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.