கிழக்கு பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிழக்கு பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது!


கிழக்கு பல்கலைக்கழக விடுதிக்கு அருகில் வைத்து பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய மாணவனை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


நேற்று (08) நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பப் பிரிவில் கல்வி கற்றுவரும் மாணவி ஒருவரையே இவ்வாறு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஆண்கள் விடுதிக்கும் பெண்கள் விடுதிக்கும் இடையிலுள்ள பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதனையடுத்து உடனடியாக மாணவனை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


இதில் கைது செய்யப்பட்ட மாணவன் விடுதியில் தங்கிருந்து வர்த்தகப் பிரிவில் கல்வி கற்றுவரும் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


-தெரண


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.