நாட்டின் கொரோனா நிலைமையை பகிரங்கப்படுத்திய அமைச்சர்! - வெளியான அதிர்ச்சித் தகவல்!

நாட்டின் கொரோனா நிலைமையை பகிரங்கப்படுத்திய அமைச்சர்! - வெளியான அதிர்ச்சித் தகவல்!


தினமும் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களை போன்று இரண்டு முதல் மூன்று மடங்கு கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்தார்.

தொற்றாளர்கள் என அறிவிக்கப்படுபவர்கள் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் மூலம் அடையாளம் காணப்படுபவர்களே என்றும், பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாமல் சமூகத்தில் மேலும் பல தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏப்ரல் 15 திகதி முதல் நாட்டில் 44,000 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி திட்டமானது கைவசம் இருக்கும் தடுப்பூசிகள் முடிந்ததும் நிறுத்தப்படும் என்றும், அடுத்த தொகுதி தடுப்பூசிகளைப் பெற்ற பிற்பாடு தடுப்பூசி செலுத்தும் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் தொற்றுநோயை மூடிமறைக்கிறதா என்று அவரிடம் வினவப்பட்ட போது, ​​அது பொய்யானது என்றும், "நாங்கள் தொற்றுநோயை மறைக்க முயன்றால், நாங்கள் மறைக்கப்படுவோம்" என்று தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.