கொழும்பில் கடுமையாக தாக்கப்பட்ட பெண் அதிகாரி - விசேட விசாரணைகள் ஆரம்பம்!

கொழும்பில் கடுமையாக தாக்கப்பட்ட பெண் அதிகாரி - விசேட விசாரணைகள் ஆரம்பம்!

பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசம் ஒன்றில் நேற்று மாலை பெண் அபிவிருத்தி அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். கெஸ்பேவ பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள தெல்தர மேல் கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கு பொறுப்பான அபிவிருத்தி அதிகாரி ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசம் ஒன்றின் மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உலர் உணவுப் பொருட்களை பெற்றுக் கொடுத்த பின்னர் வீடு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் அவரை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த பண்டாரகம, அட்டலுகம பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு 6 வருட சிறைத்தண்டனை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டதாகவும் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.