கொரோனா தொற்று உறுதியானதும் வீட்டை விட்டு தப்பியோடிய இளைஞன் - பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார் (புகைப்படம் இணைப்பு)

கொரோனா தொற்று உறுதியானதும் வீட்டை விட்டு தப்பியோடிய இளைஞன் - பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார் (புகைப்படம் இணைப்பு)

பொரள்ள பொலிஸ் பிரிவில் உள்ள மெகசின் வீதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தமக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார்.

மெகசின் பகுதியில் உள்ள சங்கீத் தனுஸ்க என்ற 28 வயதுடைய இளைஞனுக்கு தொற்று இருப்பது கடந்த 26ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவரை சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக பொரள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகள் சுகாதார அதிகாரிகளுடன் நேற்று (28) இளைஞனின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது வீட்டிலுள்ளவர்களுக்கு தெரியாமலேயே அவர் தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டு, அவர் பற்றிய ஏதேனும் தகவல் கிடைத்தால் பின்வரும் தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறார்கள்.

பொரள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - 071 85 91 587

பொரள்ள பொலிஸ் நிலையம் - 011 26 94 019


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.