நாட்டினுள் எப்படி பிரிட்டன் வைரஸ் பரவியது? சஜித் விளக்கம்!

நாட்டினுள் எப்படி பிரிட்டன் வைரஸ் பரவியது? சஜித் விளக்கம்!


கொரோனா வைரஸ் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (18) சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சியும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர்.


நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கொரோனா வைரஸினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாட்டினை அரசாங்கம் இழந்துவிட்டது என குறிப்பிட்டார்.


சுற்றுலா பயணிகளை சுதந்திரமாக பயோ பபிளுக்கு மத்தியில் நடமாட அனுமதித்துள்ளமை கவலையளிக்கின்றது என எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.


போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வைரஸ் பரவுகின்றது என தெரிவித்த எதிர்கட்சி தலைவர் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை நீக்கியமையும் இதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.


இலங்கையின் பல பகுதிகளிற்கும் பயோ பபிள் மூலம் நடமாட அனுமதிக்கப்பட்ட உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் மூலமே பிரிட்டன் வைரஸ் நாட்டில் பரவியது என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.


இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், அரசாங்கத்தின் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்கட்சி தலைவர் குழப்ப முயல்கின்றார் என தெரிவித்தார்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.