ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மேலுமொரு இரகசியத்தை அம்பலப்படுத்திய சட்ட மா அதிபர்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மேலுமொரு இரகசியத்தை அம்பலப்படுத்திய சட்ட மா அதிபர்!


ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அறிவிக்கப்பட்டுள்ள நௌபர் மௌலவி மாத்திரமல்ல, இன்னும் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.


நேரங்கள், இலக்குகள், இடங்கள், தாக்குதல்களின் முறை மற்றும் பிற தகவல்களுடன் அரச புலனாய்வு துறையின் தகவல்கள் ஒரு பெரிய சதித்திட்டம் இருந்ததற்கான சான்றாக இருப்பதாகவும் சட்டமா அதிபர் கூறியுள்ளார்.


தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய விசேட செவ்விலிலேயே அவர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.


இந்த தாக்குதலுக்கு பின்னால் மிகப்பெரிய சூழ்ச்சி இடம்பெற்றிருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.


அந்த சூத்திரதாரிகளில் ஒருவராகவே நௌபர் மௌலவியும், சஹ்ரானும் இருக்கின்றார்கள் எனக் குறிப்பிட்டிருக்கும் சட்டமா அதிபர், வெளிநாட்டுத் தொடர்பாளர்கள் குறித்த தகவல்கள் சில சந்தர்ப்பங்களில் வெளிவரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.