முஸ்லிங்களின் மீது சாணாக்கியன் எம்.பி போலி பாசம் காட்டுகிறாரா?
advertise here on top
advertise here on top

முஸ்லிங்களின் மீது சாணாக்கியன் எம்.பி போலி பாசம் காட்டுகிறாரா?


பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் இன்றைய (04) பாராளுமன்ற உரையில் அவரது சொந்த முகம் அப்பட்டமாக வெளியானது. நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் 25 பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைகள் இருந்த போதிலும் அம்பாறையில் உள்ள மற்றுமொரு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையான கல்முனை காரியாலயம் முஸ்லிங்களின் தேவைக்கானது போன்று கருத்துப்பட தனது அறியாமையை வெளிக்காட்டியுள்ளார். 


அந்த பணிமனையின் நிர்வாகத்தின் கீழ்தான் காரைதீவு, நாவிதன்வெளி, ஆலையடி வேம்பு, திருக்கோவில், போன்ற தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேச செயலகங்களின் கீழுள்ள மக்களும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் வருகிறது. 


அந்த பணிமனையின் பணிப்பாளராக டாக்டர் குணசிங்கம் சுகுணன் எனும் தமிழ் மகன் ஒருவரே இருக்கிறார். கடந்த காலங்களில் முஸ்லிம் ஆளுநரை துரத்தியடிக்க தமிழ் இனவாதிகள் முயன்றதை போன்று அவரை துரத்தியடிக்கும் எவ்வித நடவடிக்கைகளையும் அந்த பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்யவில்லை. 


சுகாதார இராஜாங்க அமைச்சராக அந்த பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் ஒருவரே இருந்தும் அவரை விட சேவை மூப்பில் பல டாக்டர்கள் இருந்தும் தமிழ் இனவாதிகளை போன்று யாரும் செயற்பட முன்வரவில்லை. இப்படியிருக்க அந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையை கேள்விட்குட்படுத்தி இன்று அவர் முழு காட்டிக்கொடுப்பை செய்துள்ளார்.


அது மாத்திரமின்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வலயக்கல்வி அலுவலக விடயத்தையும் தொட்டு சென்றார். ஒரு பிரதேசத்தின் நீண்டநாள் வரலாறோ அல்லது ஒரு பிரச்சினையின் அடிவேரோ தெரியாமல் மூக்கை நுழைத்துவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அறியாமையை உயரிய சபையில் தொடர்ந்து வெளிக்காட்டிவருவது உங்களை நம்பி வாக்களித்த மக்களை தலைகுனிய செய்துவிடும். 


முட்டாள்கள் உளறுவதை போல இன்று பாராளுமன்றத்தில் கல்முனை விடயம், முஸ்லிங்களின் விடயம் தொடர்பில் பேசிய அவர் அந்த பிரச்சினைகளின் அகல, நீளத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். கல்முனை விடயத்தில் மௌனமாக இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரிடம் இந்த பிரச்சினை பற்றி அவர் அறிந்துகொண்டு நாட்டின் உயரிய சபையில் பேச முன்வர வேண்டும். 


தனது வடகிழக்கு மாகாண முதலமைச்சர் கனவை அடைய கிழக்கு தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் மூட்டிவிட்டு குளிர்காய முன்வருவது கண்டிக்கத்தக்கது. கடந்த காலங்களில் உங்களின் கூடாரம் எங்கிருந்து எப்படி நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக இடம்பிடித்தீர்கள், எப்படி தேர்தலில் வென்றிர்கள் என்பது எல்லா மக்களும் தெரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 


நீங்கள் யார் என்பதை முஸ்லிம் சமூகம் அறிந்து வைத்துள்ளது. ஆகவே ஆடு நனைகிறது என ஓநாய் அழுதகதையாக முஸ்லிங்களின் மீது போலி பாசம் காட்டுவதை நிறுத்தி உங்கள் பானை அடுப்பில் பல தசாப்தமாக கருகிப்போகியுள்ளது அதை பாருங்கள் என கேட்டுக்கொள்கிறோம்.


கிழக்கு இளைஞர் சமாதான பேரவை

கல்முனை


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.