வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான விசேட காப்புறுதி திட்டம்!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான விசேட காப்புறுதி திட்டம்!


வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்காக விசேட காப்புறுதி திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.


அதற்கமைய, மரணம் சம்பவிக்கும்போது, 6 இலட்சம் ரூபாவும், பூரண அங்கவீன நிலைமைக்கு உள்ளாகும்போது 4 இலட்சம் ரூபாவும் இழப்பீடாக வழங்க, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


எனினும், வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு தமது பணியிடங்களில் இடம்பெறும் தொழில்நுட்ப மற்றும் வீடுகளில் இடம்பெறும் விபத்துகள், பல்வேறு நோய் நிலைமைகள் மற்றும் தொழில்தருனர்களால் ஏற்படுத்தப்படும் தொந்தரவுகளால் ஏற்படும் மனநல மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கு இந்த காப்புறுதி திட்டத்தின் கீழ் எவ்வித அனுகூலமும்  வழங்கப்படமாட்டாது எனத் தொழில் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.