கடினமான தீர்மானங்களை செயற்படுத்த நாங்கள் தயங்க மாட்டோம் - பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அதிரடி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடினமான தீர்மானங்களை செயற்படுத்த நாங்கள் தயங்க மாட்டோம் - பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அதிரடி

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள வேண்டுமாயின் கடினமான தீர்மானங்களை செயற்படுத்த நேரிடும். ஆகவே பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பயணத்தடை மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இாஷதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், பொது மக்களை பாதுகாக்கவும் அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது.

பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினரது ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்வது இன்றியமையாததாக காணப்படுகிறது.

கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளன.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வீதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுகிறார்கள். அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினர் அதனையும் முறையற்ற வகையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

வீதியில் கடமையில் ஈடுப்படும் பொலிஸாருக்கும், பொது மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஒரு சில பிரதேசங்களில் இடம் பெற்றுள்ளன. பொது மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் கடமையில் ஈடுபட வேண்டாம் எனவும் கடினமான முறையில் செயற்பட வேண்டாம் எனவும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையிலும் பொது மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே பொலிஸாரும், இராணுவத்தினரும் வீதியில் கடமையில் ஈடுப்படுகிறார்கள்.

பொது மக்களும் அவர்களின் மனநிலையினை புரிந்துக் கொண்டு செயற்பட வேண்டும். இரு தரப்பினரும் அனுசரித்து செயற்பட்டால் பிரச்சினைகள் தோற்றம் பெறாது. பொது மக்களை காட்டிலும் பொலிஸாரும், இராணுவத்தினரும் மிகவும் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகும் என்றார்
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.