இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அங்குள்ள தூதரகம் விசேட வேண்டுகோள்!

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அங்குள்ள தூதரகம் விசேட வேண்டுகோள்!


இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என இஸ்ரேலிற்கான இலங்கை தூதகரம் அறிவுறுத்தியுள்ளது.


காஸா பள்ளத்தாக்கில் அதிகரித்து வரும் வன்முறை காரணமாக இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பெருமளவு மக்கள் காணப்படும் பகுதிகளை தவிர்க்க வேண்டும் என தூதரகம் ஆலோசனை வழங்கியுள்ளது.


இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளவேண்டும் எனவும் தூதுரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இலங்கையர்கள் தங்கள் பிரயாண ஆவணங்களை எப்போதும் தங்களுடன் வைத்திருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தூதரகம் மிகவும் அவசரமான சூழ்நிலைகளில் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டுள்ளது.கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.