வயதான பௌத்த துறவியை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஐவர் கைது!

வயதான பௌத்த துறவியை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஐவர் கைது!


கால்வாயில் மீன் பிடிப்பது பாவம் என்று அறிவுரை கூறியதை அடுத்து 85 வயது பௌத்த துறவி ஒருவர் தடியால் அடித்து கொலை செய்யப்பட்டதாக வெலிகம பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது


மேலும் இந்த தாக்குதல் கடந்த மாதம் 29 ஆம் திகதி நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட துறவி 16 நாட்களாக மாத்தறை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.. 


வெலிகம கொவியாபான கபுவத்த ஸ்ரீ விவேகாராம கோயிலின் தலைமை பதவியில் இருந்த தித்தகல்லே தேவானந்த தேரரே இவ்வாறு இதில் உயிரிழந்துள்ளார்.


மேலும் இந்த தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் ஐந்து இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.


அத்தோடு குறித்த விகாரைக்குப் பின்னால் உள்ள மீன்களுக்கு அரிசி வீசும் பழக்கம் தேரருக்கு நீண்ட காலமாக இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி அந்த இடத்தில் தங்கியிருந்த ஒரு இளைஞன் மீன்பிடிக்கத் தொடங்கியுள்ளார்.


மேலும் அதை தேரர் தடுக்க முற்பட்ட போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சந்தேக நபர் மேலும் 5 பேருடன் வந்து துறவியைத் தாக்கியதாக பொலிசார் தெரிவித்தனர். 


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.