🔴 பயணக்கட்டுப்பாடு : கொரோனா தடுப்பு மையத்தினால் எடுக்கப்பட்ட விசேட தீர்மானங்கள்!

🔴 பயணக்கட்டுப்பாடு : கொரோனா தடுப்பு மையத்தினால் எடுக்கப்பட்ட விசேட தீர்மானங்கள்!


இன்று 
மே 24 கொரோனா தடுப்பு மையத்தினால் எடுக்கப்பட்ட விசேட தீர்மானங்கள்

 • 2021-05-25 அதிகாலை 04.00 முதல் இரவு 11.00 வரை பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும். 
 • நாளைய தினம் (25) சில்லரை விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், மீன் விற்பனை நிலையங்கள், மாமிச விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரி விற்பனை நிலையங்கள் மாத்திரம் திறக்க அனுமதி.
 • மதுபானசாலைகளுக்கு முற்றாக பூட்டு.
 • அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே அருகில் இருக்கும் விற்பனை நிலையங்களுக்கு செல்ல வேண்டும். 
 • நாளைய தினம் (25) தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்க விதி செல்லுபடியாகாது. 
 • எந்த காரணத்திற்காவும் வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை. 
 • நாளை (25) இரவு 11.00 முதல் 31 வரை அதிகாலை 04.00 வரை மீண்டு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும். 
 • 31 ஆம் திகதி அதிகாலை 04.00 மணி முதல் 11.00 வரை பயணக்கட்டுப்பாடு தற்காலிகமாக நீக்கப்படும். 
 • 31 ஆம் திகதி இரவு 11.00 மணி முதல் ஜூன் 04 ஆம் திகதி அதிகாலை 04.00 வரை மீண்டும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும். 
 • ஜூன் 04 அதிகாலை 04.00 முதல் இரவு 11.00 வரை தற்காலிகமாக பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும். 
 • ஜூன் 04 இரவு 11.00 முதல் மீண்டும் ஜூன் 07ஆம் திகதி அதிகாலை 04.00 வரை மீண்டும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும். 
 • பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் காலத்தில் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நடமாடும் சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும். 
 • விமானப்படையினர் மூலம் டுரோன் கமராக்கள் மூலம் நாடு தினமும் கண்காணிக்கப்படும். 
எம். ஐ. மொஹமட்
(யாழ் நியூஸ்)

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.