இலங்கையில் வெகுவிரைவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாத நிலையேற்படும் - எச்சரித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

இலங்கையில் வெகுவிரைவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாத நிலையேற்படும் - எச்சரித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அவசியமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் முடக்கல்நிலையால் கூட கொரோனா வைரஸ்பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலையேற்படும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின உதவி செயலாளர் நவீன் டி சொய்சா இதனை தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகள் என்பன வைரஸ்பரவலை கட்டுப்படுத்துகின்ற பக்க விளைவுகளை தடுக்கின்ற ஒரு வழிமாத்திரமே என அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளை அதிகரிக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் சிலநாடுகள் இன்னமும் தடுப்பூசிகளை வழங்குவதை ஆரம்பிக்கவில்லை தடுப்பூசிகளை பெறுவது இலகுவான விடயமல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சுழ்நிலையில் அரசாங்கம் ஏன் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவது குறித்த அலட்சியத்துடன் மக்கள் நடமாடுவதற்கான சுதந்திரத்தை வழங்கியது என கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு மிகவும் ஆபத்தான நிலையிலுள்ள நாட்டை முடக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் பிசிஆர் சோதனைகளை அதிகரிக்காமல் வைரஸ்பரவலை கட்டுப்படுத்த முடியாது அதிகரிக்கும் எண்ணிக்கைi மருத்துவமனைகளால் சமாளிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.