மருத்துவ சங்கங்கள் முன்வைத்த 7 பரிந்துரைகள்! கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

மருத்துவ சங்கங்கள் முன்வைத்த 7 பரிந்துரைகள்! கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் கோரிக்கை!


இலங்கையின் தற்போதைய கொரோனா நெருக்கடி நிலை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள இலங்கை மருத்துவ சங்கம், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம், மருத்துவ நிபுணர்கள் சங்கம் மற்றும் SLMA இன்டர்கொலேஜியேற் குழு ஆகியன கூட்டாக இணைந்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளன.


ஜனாதிபதியிடம் மருத்துவர்கள் ஏழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். அவை விரைவில் செயற்படுத்தப்பட வேண்டுமென்றும் கருதுகின்றனர்.


கடுமையான நகர்வுக் கட்டுப்பாடுகள், சோதனைகளை விரிவுபடுத்தல், அறிகுறியற்ற நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தல் மற்றும் மேலதிக உபகரணங்கள் ஆகியவை அவர்களின் முக்கிய கோரிக்கைகளில் அடங்குகின்றன.


-சி.எல்.சிசில்

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.