ஓட்டமாவடியில் 202 கொரோனா மரண சடலங்கள் நல்லடக்கம்! இவ்வாரத்தில் மட்டும் 46 சடலங்கள்!

ஓட்டமாவடியில் 202 கொரோனா மரண சடலங்கள் நல்லடக்கம்! இவ்வாரத்தில் மட்டும் 46 சடலங்கள்!

கடந்த திங்கள் முதல் வியாழன் (20) வரையான நான்கு நாட்களில் கொரோனா தொற்றினால் மரணித்த 46 உடல்கள் ஓட்டமாவடி - மஜ்மா நகர்ப்பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

மேலும் குறித்த இடத்தில் நேற்று மாத்திரம் 8 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

இதில், முஸ்லிம், கிறிஸ்தவ, இந்து, சிங்கள இனங்களைச் சேர்ந்தோரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நேற்று (20) வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்ட 8 உடல்களுடன் மொத்த தொகை 202 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Seyed Ali Zahir Moulana’s Facebook Post

இன்றுடன் , எண்ணிக்கையின்படி, 202 சடலங்கள் ஒட்டமாவடி பகுதியில் அமைந்துள்ள COVID-19ஆல் மரணிப்பவர்களுக்கு...

Posted by Seyed Ali Zahir Moulana on Thursday, May 20, 2021

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.