வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய 06 கொரோனா தொற்றாளர்கள்!

வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய 06 கொரோனா தொற்றாளர்கள்!

களுத்துறை நாகொடை வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்களான மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் நேற்றிரவு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றாளர்கள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படும் வைத்தியசாலையின் 3வது விடுதியில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பெண்களும், மூன்று ஆண்களுமே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்கள் வைத்தியசாலையின் மதில் சுவருக்கு மேல் அமைக்கப்பட்டிருந்த வலையை பிரித்து தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் சென்றுள்ள பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஏனையோர் யார் என்பதை அறிய ஆவணங்களை பரிசோதித்து வருவதாகவும் அதிகளவானவர்கள் சிகிச்சை பெற்று வருவதால் தப்பிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து சரியாக தெரிவிக்க முடியவில்லை என நாகொடை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மற்றும் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் ஒரே விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு இடையில் பதற்றமான நிலைமை காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.