
திறன்பேசி பாவனையாளர்களுக்கான வரையறையற்ற இணையபொதிகளை (Unlimited Internet Packages) எதிர்வரும் வாரமளவில் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வரையறை அற்ற இணையபொதிகளை அறிமுகப்படுத்துமாறு அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியிருந்தது.
இதற்கமைய, தொலைத்தொடர்பு சேவையினை வழங்கும் அனைத்து நிறுவனங்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட வரையறையற்ற இணைய பொதிகள் குறித்த பரிந்துரைகளை மீள் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த இணைய பொதிகள் தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை இந்த வாரத்துக்குள் மேற்கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்பின்னர், எதிர்வரும் வாரம் முதல் நாட்டு மக்களுக்கு அதிவேகமான வரையறையற்ற இணைய சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.