கங்கையில் மிதந்த மனிதத் தலை! பொலிஸார் தீவிர விசாரணை; உடல் பகுதி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை!

கங்கையில் மிதந்த மனிதத் தலை! பொலிஸார் தீவிர விசாரணை; உடல் பகுதி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை!


மாத்தறை – நில்வலா கங்கையின் தொட்டமுன, பொங்கு முகத்தை அண்மித்த பகுதியில் ஆண் ஒருவரின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சடலத்திலிருந்து அகற்றப்பட்ட தலைப் பகுதி நேற்று கண்டுபிடிக்கப்பட்டதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர். தலை மீட்கப்பட்ட பகுதியிலிருந்து 150 மீற்றர் தூரத்தில் இருந்து இடது கால் பகுதி ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மனித எச்சம் அழுகிய நிலையில் காணப்பட்டுவதாக பொலிஸார் கூறினர்.


உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் சடலத்தின் உடல் பகுதியும் இன்று (16) மாலை வரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் மாத்தறை பொலிஸார் கூறினர்.


குறித்த தலைப் பகுதி மீட்கப்பட்ட விடயம், குற்றச் செயல் ஒன்றின் பிரதிபலனா அல்லது மிருகங்களால் இழுத்து வரப்பட்டு கைவிடப்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் விஆசட நிபுணர்களின் உதவியுடன் ஆராய்ந்து வருகின்ரனர்.


சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.


-எம்.எப்.எம்.பஸீர்


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.