தேங்காய் எண்ணெய் குறித்து புதிய வர்த்தமானி அறிவித்தல், பழையது ரத்து!

தேங்காய் எண்ணெய் குறித்து புதிய வர்த்தமானி அறிவித்தல், பழையது ரத்து!


தேங்காய் எண்ணெய் குறித்து புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிடவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயை வேறு எண்ணெய் வகைகளுடன் கலப்பதற்காக வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு ரத்து செய்யப்படும் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்களுடன் ஏனைய எண்ணெய் கலப்பதற்கு 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை தற்போது ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யை வேறு எண்ணெய் வகைகளுடன் கலப்பதை தடுக்கும் வகையில் புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட உள்ளதாக பந்துல தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post