வாக்குவாதம் முற்றியதில் பொலிஸ் உத்தியோகத்தரின் கை விரலை கடித்து துப்பிய இளைஞர் கைது!

வாக்குவாதம் முற்றியதில் பொலிஸ் உத்தியோகத்தரின் கை விரலை கடித்து துப்பிய இளைஞர் கைது!


யாழ்ப்பாணத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கை விரலைக் கடித்து, காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர்.


யாழ். ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாக விகாரையில் இரவுக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும் அங்கு பணிபுரிந்த இளைஞருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு, பின்னர் கைகலப்பாக மாறியதால், பொலிஸ் உத்தியோகத்தரின் கை விரலை இளைஞர் கடித்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


காயத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். விரலைக் கடித்த இளைஞரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.