விரைவில் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!

விரைவில் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!

எதிர்வரும் மே மாதமளவில் சமையல் எரிவாயுவின் விலை 195 ரூபா முதல் 200 ரூபா வரையில் வரையில் அதிகரிக்ககூடும் என அரச வட்டார தகவல் தெரிவித்துள்ளன.

12.5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 700 ரூபாவிலும் லாப் நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 655 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபையிடம் அனுமதி கேட்டுக்கொண்டுள்ளதாக அந்நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதுடன் ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதனால் தமது நிறுவனங்களுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

ஆகவே, தற்போது காணப்படும் விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை தொடர்ந்தும் விற்பனை செய்வதற்கு முடியாதென அந்நிறுவனங்கள் அரசாங்கத்திடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பதற்கு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளபோதிலும் அது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை' என தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.