கொரோனா - சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி!

கொரோனா - சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் ரோடு சேப்டி கிரிக்கெட் தொடரில் சச்சின் தலைமையிலான ‛இந்தியா லெஜண்ட்ஸ்' அணி, கோப்பையை வென்றது. அந்த அணியில் விளையாடிய வீரர்களான சச்சின் டெண்டுல்கர், பத்ரிநாத், இர்பான் பதான், யூசுப் பதான் ஆகியோருக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து சச்சின் உள்ளிட்டோர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.

இந்நிலையில், இன்று (ஏப்.,2) சச்சின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. மருத்துவ ஆலோசனையின் கீழ் ஏராளமான முன்னெச்சரிக்கை விஷயமாக, நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். கவனமாக இருங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்,' எனப் பதிவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post