விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசி!

விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசி!

விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

Carnivak-Cov என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை ரஷ்யாவின் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கான மத்திய ஆணையம் உருவாக்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடங்கிய Carnivak-Cov தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையின் போது நாய்கள், பூனைகள், ஆர்க்டிக் நரிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாக ரஷ்ய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சோதனை முடிவில் தடுப்பூசி பாதிப்பில்லாதது எனவும் விலங்குகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு திறனை வழங்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா, கனடா, போலந்து, அவுஸ்திரேலியா, கிரீஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருந்து நிறுவனங்கள் Carnivak-Cov தடுப்பூசியை வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளன.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.