
சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக புத்தாண்டை முன்னிட்டு ஐயாயிரம் ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
இதனடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் சமுர்த்தி வங்கிகளினூடாக பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.