இலங்கையில் கூடிய விரைவில் “டிஸ்னி லேண்ட்” !

இலங்கையில் கூடிய விரைவில் “டிஸ்னி லேண்ட்” !

மலேசியா மற்றும் கொரியாவின் முதலீடுகளைக் கொண்ட கொரியா கேவிடேஷன் கோ நிறுவனத்தால் தெற்காசியாவில் முதல் “டிஸ்னி லேண்ட்” இலங்கையில், போபிட்டிய பூங்காவில் அமையப்படவுள்ளது.  

இந்த திட்டத்திற்காக 150 ஏக்கர் நிலத்தை குத்தகை அடிப்படையில் பெற அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முன்மொழியப்பட்ட “டிஸ்னி லேண்ட்” மலேசியாவின் ஜென்டிங் ஹைலேண்ட்ஸைப் போலவே இருக்கும் என்றும், அதனுடன் சிறப்பு ரயில் இணைப்பும் 300 அறைகள் கொண்ட ஹோட்டல் ஒன்றும் உள்ளடங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post