நாட்டின் சில பாகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் சில பாகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


நாட்டின் சில மாவட்டங்களில் எதிர்வரும் நாட்களில் அதிக வெப்பமான வானிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


முல்லைதீவு, வவுனியா, திருகோணமலை, பொலனறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு அதிக வெப்பமான வானிலை காணப்படுமென எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது


இதன்படி, குறித்த மாவட்டங்களின் சில இடங்களில் 32 முதல் 41 பாகை செல்சியல் அளவில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுமென அறிவிக்கபட்டுள்ளது.


இவ்வாறு அதிக வெப்பநிலை காணப்படும் இடத்து விரைவாக சோர்வடைதல், தோல் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதினால், பாதுகாப்பாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.


மேலும், தொழில் இடங்களில் வேலைகளில் ஈடுப்படும் போது போதிய நீர் பருகுவதுடன், அவதானமாக செயற்ப்படுமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அத்துடன், வாட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ளவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கபட்டுள்ளது.


அத்துடன், சிறுவர்களை தனியாக வாகனங்களில் அழைத்து செல்வதையோ அல்லது விட்டுச்செல்வதையோ தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், வெட்டவெளியான இடங்களில் இருக்கக்கூடியவர்கள் போதிய  நீர் பருகுவதுடன், நிழலான இடங்களில் தங்குமாறும், கடினமான வேலைகளில் விரைவாக ஈடுப்படுவதை தவிர்க்குமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அத்துடன், வெள்ளை அல்லது மென்மையான நிறங்களினாலான மெல்லிய ஆடைகளை அணிந்து வெளியில் செல்வது உடல் வெப்பநிலையை குறைக்க ஏதுவாக அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.