மொட்டுக் கட்சியினை (பொஹொட்டுவ) தவிர்த்து அனைத்து ஆளும் கட்சி பங்காளிகளும் தனியே மே தின நிகழ்வுகள்!

மொட்டுக் கட்சியினை (பொஹொட்டுவ) தவிர்த்து அனைத்து ஆளும் கட்சி பங்காளிகளும் தனியே மே தின நிகழ்வுகள்!

பதினொரு அரசு பங்காளிகள் தனி மே தின பேரணியை நடத்த முடிவு செய்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்ற 11 கட்சித் தலைவர்களின் சிறப்புக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் அமைச்சரவை அமைச்சர்களான வாசுதேவ நானாயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, இலங்கை சுதந்திர கட்சி பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர, ரதன தேரர், அதாவுல்லாஹ், தியூ குணசேகர, அசங்க நவரத்ன, பேராசிரியர் திஸ்ஸா விதான, டிரான் அலெஸ் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

மே தின பேரணிக்கு இந்த மாற்றுக் குழுவில் இலங்கை சுதந்திரக் கட்சியும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மொட்டு தலைமையிலான இலங்கை சுதந்திர மக்கள் கூட்டணி (SLFP) மே 01 அன்று தனி மே தின பேரணியை நடத்துகிறது. 11 முக்கிய கட்சிகள் தனித்தனியாக மே தின பேரணியை நடத்துவது குறித்து எந்த காரணங்களும் வெளியிடப்படவில்லை.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post