அரசாங்கத்தில் நெருக்கடி - ஜனாதிபதி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு!

அரசாங்கத்தில் நெருக்கடி - ஜனாதிபதி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு!

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது தொடர்பான புதிய சட்டமூலங்கள் தொடர்பாக ஆளும் கட்சிக்குள் இருக்கும் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆளும் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்..

தொகுதிவாரியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு கடந்த வாரம் அமைச்சரவையில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்ட போதிலும், ஒவ்வொரு தொகுதியிலும் ஒரே கட்சியைச் சேர்ந்த மூன்று வேட்பாளர்களை நிறுத்துவதற்கான புதிய சட்டமூலம் ஒன்றின் முன்மொழிவுக்கு பெரும்பான்மையான அமைச்சர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

அமைச்சர்கள் தினேஷ் குணவர்தன, வாசுதேவ நானாயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பந்துல குணவர்தன ஆகியோர் இந்த திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவு எடுக்க கட்சித் தலைவர்களுடனான கூட்டம் கூட்டப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இருப்பினும், மாகாண சபை தேர்தல் தொகுதிவாரியாக நடத்தப்படும் என்று அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post