எனது புதல்வர் துறைமுக நகரில் தான் தொழில் புரிகிறார்! உங்களுக்கு என்ன பிரச்சினை? -நிதி இராஜாங்க அமைச்சர்

எனது புதல்வர் துறைமுக நகரில் தான் தொழில் புரிகிறார்! உங்களுக்கு என்ன பிரச்சினை? -நிதி இராஜாங்க அமைச்சர்


தனது புதல்வர் 2016 ஆம் ஆண்டு முதல் கொழும்பு துறைமுக நகர் திட்டத்தில் கடமையாற்றி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் இன்று தெரிவித்துள்ளார்.


நேற்று (18) கண்டியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


தனது புதல்வர் சிறந்த கல்வி அறிவைக் கொண்டவர் எனவும், அவருக்கு வெளிநாடுகளில் பட்டப்படிப்புகளுக்கான சான்றிதழ்கள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.


தனது மகன் கொழும்பு துறைமுக நகரில் கடமையாற்றினால், உங்களுக்கு என்ன பிரச்சினை என அஜித் நிவாரட் கப்ரால், ஊடகவியலாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.