காட்டுக்குள் தப்பியோடிய போலி தேரரை இனம்காண பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

காட்டுக்குள் தப்பியோடிய போலி தேரரை இனம்காண பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!


தம்மை தேரர் என்று கூறிக்கொண்டு மீகலேவ - ரெஸ்வேஹர ரஜமஹா விகாரைக்கு சென்று அங்கிருந்து தப்பி சென்ற நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.


குறித்த நபர் தம்மை தேரர் என்று கூறி நேற்று பிற்பகல் குறித்த விகாரைக்கு சென்றுள்ளார்.


அவர் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் விகாரையின் விகாராபதி வினவியமையை அடுத்து குறித்த நபர் அருகிலிருந்த கஹகல்ல வனப்பகுதிக்குள் தப்பி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில் அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக மீகலேவ பொலிஸாருக்கு அறிவிக்குமாறு காவல்துறை பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கோரியுள்ளார்


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.