மரங்களை கடத்திச் சென்ற வாகனம் மோதி இராணுவத்தினர் இருவர் படுகாயம்!

மரங்களை கடத்திச் சென்ற வாகனம் மோதி இராணுவத்தினர் இருவர் படுகாயம்!


வவுனியாவில் மரங்களை கடத்திச் சென்ற வாகனம் மோதியதில் இராணுவத்தினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.


இந்தச் சம்பவம் இன்று (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஓமந்தைப் பகுதி A-9 வீதியூடாக வவுனியா நோக்கி மரங்களை ஏற்றிசென்ற வாகனத்தினை ஓமந்தையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த இராணுவத்தினர் மறித்துள்ளனர்.


இதன்போது, மரக் கடத்தல்காரர்கள் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதுடன் அங்கிருந்த இராணுவத்தினர் மீதும் மோதியுள்ளனர்.


இதனால், நீண்ட தூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்ட இராணுவ வீரர்களில் ஒருவர் வீதியில் வீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்ததுடன் மற்றொரு சிப்பாயும் காயங்களுக்குள்ளானார்.


இதேவேளை, மரங்களைக் கடத்திச்சென்ற வாகனம் சற்று தூரத்தில் விபத்துக்குள்ளாகி நின்றதையடுத்து வாகனத்தின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.