உலகில் மிகவும் நீளமான மற்றும் ஆழமான பள்ளத்தாக்கில் பிரமாண்டமான அணை ஒன்றை கட்ட சீனா முடிவு!

உலகில் மிகவும் நீளமான மற்றும் ஆழமான பள்ளத்தாக்கில் பிரமாண்டமான அணை ஒன்றை கட்ட சீனா முடிவு!


திபெத்தின் மொசோ மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாக்கில் பிரமாண்டமான அணை ஒன்றைக்கட்ட சீனா முடிவு செய்துள்ளது. 


இந்நிலையில், சீனா இந்த அணையை கட்டினால் இந்தியாவுக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 


உலகிலேயே மிகவும் நீளமான மற்றும் ஆழமான பள்ளத்தாக்கில் இந்த அணையை சீனா கட்டுகின்றது.


கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,900 அடி உயரத்தில் இந்த அணையை கட்ட சீனா திட்டமிடப்பட்டுள்ளது.


இதில் சேமிக்கும் நீரைக்கொண்டு 30 ஆயிரம் கோடி கிலோவாட்ஸ் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


சீனாவின் 14 ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த அணை கட்டுமான பணிக்கு சீனா பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.


இந்த ஆண்டு இறுதியில் அணையின் கட்டுமானப் பணி தொடங்கப்பட இருக்கிறது.


சீனா இந்த அணையை கட்டினால் இந்தியாவுக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இமயமலையில் உருவாகும் பிரம்மபுத்திரா நதி திபெத்தில் உற்பத்தியாகி இந்தியா, பங்களாதேஷ்  வழியாக செல்கிறது.


இது ஆசியாவின் வற்றாத ஜீவநதிகளில் ஒன்று. இந்த நதியின் குறுக்கே தான் சீனா கட்டும் பிரம்மாண்ட அணை அமைய இருக்கிறது.


சீனா இந்த அணையை திபெத்தில் கட்டுவதன் மூலம், பிரம்மபுத்திரா நதி இந்தியாவுக்குள் பாய்வதற்கு முன்பே அந்த தண்ணீரை தடுத்து நிறுத்த இருக்கிறது.


இதனால் இந்தியாவில் பாயும் பிரம்மபுத்திரா நதியில் தண்ணீர் வரத்து பாதிக்கப்படும். இது இந்தியாவுக்கு பேரிழப்பாக அமையும்.


சீனா நீர் மின்சாரம் தயாரிப்பதற்காக இந்த அணையை கட்டுவதாக கூறினாலும் இந்தியாவுக்கு பிரம்மபுத்திரா நதி நீர் கிடைக்காமல் தடுக்கவே இந்த சதியில் சீனா இறங்கி உள்ளது என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கிறனர்.


இந்நிலையில், இந்தியா தனது எல்லைக்கு பிரம்ம புத்திரா நதியில் மற்றொரு அணை கட்ட யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.