நாட்டின் ஐந்து மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் ஐந்து மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


நாட்டில் 5 மாகாணங்களில் இடி, மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, சப்ரகமுவ, மத்திய, மேல், வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.