
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மோட்டார் வாகன போக்குவரத்த திணைக்களத்தின் வழமையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் இன்று (10) விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகத்தில் நேர ஒதுக்கீடு செய்தவர்களுக்கான சேவைகள் முன்னெடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுமித் அழகக்கோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணம், குருநாகல், கம்பஹா, அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை ஆகிய அலுவலகங்களிலும் வழமையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சேவை பெறுநர்கள் 011-2677877 எனும் இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முன்பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.