புதையல் அகழ்வில் ஈடுபட்ட தேரர்கள் உட்பட பலர் கைது!

புதையல் அகழ்வில் ஈடுபட்ட தேரர்கள் உட்பட பலர் கைது!

வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட இரு தேரர்கள் உள்ளிட்ட 11 பேரை ஏப்ரல் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பூவரசங்குளம், தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் புதையல் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் சந்தேக நபர்களை கைதுசெய்திருந்தனர்.

அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டதுடன், 2 கார்கள் மற்றும் முச்சக்கர வண்டியையும் பொலிசார் பறிமுதல் செய்திருந்தனர்.

இந் நிலையில் சந்தேக நபர்களை இன்று வவுனியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதிவான் அவர்களை ஏப்ரல் 9 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post