விரைவில் இவற்றுக்குத் தடை - மக்களே அவதானம்!

விரைவில் இவற்றுக்குத் தடை - மக்களே அவதானம்!

பொதுவாகப் பயன்படுத்தப்படும் பதினைந்து பிளாஸ்டிக் பொருட்கள் விரைவில் தடை செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வர்த்தமானிக்காக மேலும் இரண்டு பட்டியல்கள் தொகுக்கப்பட்டு வருவதாக அமைச்சக தரப்பு தெரிவித்துள்ளது,

அதில் குறிப்பாக, ஊதப்பட்ட பொம்மைகள் சச்செட் பக்கட்டுகள் (sachet packets) மற்றும் பிளாஸ்டிக் தண்டுகளுடன் கூடிய காது தூய்மை செய்யும் பஞ்சு ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு மார்ச் 31ஆம் திகதி முதல், இலங்கையில 20 மில்லி அல்லது 20 கிராம் மற்றும் அதற்கும் குறைவான சச்செட்டுகளைப் (sachet) பயன்படுத்து தடை செய்யப்பட்டுள்ளது. (உணவு மற்றும் மருந்துகளை பொதி செய்வதைத் தவிர) அத்துடன் ஊதப்பட்ட பொம்மைகள் (பலூன்கள், பந்துகள், நீர் மிதக்கும் ஃ பூல் பொம்மைகள் மற்றும் நீர் விளையாட்டு கியர் தவிர) மற்றும் பிளாஸ்டிக் தண்டுகளுடன் கூடிய காது தூய்மை செய்யும் பஞ்சு (மருத்துவ, மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டவை தவிர) தடைசெய்யப்பட்டுள்ளன என அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.