அறிகுறிகளின்றி இறந்த இளைஞன் - சுகாதார அமைச்சர்

அறிகுறிகளின்றி இறந்த இளைஞன் - சுகாதார அமைச்சர்

அயல்நாடுகளில் சுனாமியைப் போன்று மிக வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் நிலையில் இதனை ஒரு தேசிய பொறுப்பாக நினைத்து செயற்படுமாறு தாம் இருகரம் கூப்பி நாட்டு மக்களை கும்பிட்டுக் கேட்டுக் கொள்வதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறை காலத்தில் வைரஸ் பரவல் நிலை அதிகரிக்கலாம் என்பதை கவனத்தில் கொண்டு மக்கள் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள அமைச்சர் எதிர்வரும் தினங்களில் மத வைபவங்கள், புனித தலங்களுக்கான யாத்திரைகள், சுற்றுலா பயணங்கள், புத்தாண்டு நிகழ்வுகளையும் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் நாட்டையும் நாட்டு மக்களையும் கவனத்திற்கொண்டு அவற்றை நிறுத்துமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர் என்ற ரீதியில் அதன் மோசமான நிலையை தாம் அறிந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் தற்போது பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் ஒருவருக்கு தொற்றினால் 14 நாட்கள் கடந்த பின்னரே அதனை கண்டறிய முடியும் என்பதையும் குறிப்பிட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் எந்த ஒரு நோய் அறிகுறியும் இல்லாமல் இளைஞர் ஒருவர் இறந்தமையையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் நாட்டில் வைரஸ் பரவலை வெற்றிகரமாக முறியடிப்பதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கியது போன்று தொடர்ந்தும் நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இக்காலகட்டங்களில் முகக் கவசங்களை அணிவது, சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றுவது போன்றவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறும் அமைச்சர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.