நாடாளுமன்றத்தில் கறுப்பு சால்வையால் ஏற்பட்ட சலசலப்பு!

நாடாளுமன்றத்தில் கறுப்பு சால்வையால் ஏற்பட்ட சலசலப்பு!


நாடாளுமன்றில் நேற்றைய தினம் (20) அமர்வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நியாயம் கிடைக்கும் வரை தான் கறுப்பு சால்வை அணிய போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கூறியிருந்தார்.


நேற்றைய நாடாளுமன்றில் தனது உரையை ஆரம்பிக்கும் போது கறுப்பு சால்வையை அணிந்திருக்கவில்லை என்பதை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதால் இந்த சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


அப்போது பதில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ "சால்வை நினைவுக்கு வருமா என்று நான் எதிர்பார்த்தேன்.


நான் சால்வையை அருகில் வைத்துக் கொண்டுதான் இருந்தேன்" எனக் கூறியதுடன், "சால்வை குறித்து நினைவூட்டியது நல்லது" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நியாயம் கிடைக்கும் வரை தான் கறுப்பு சால்வையை அணிய போவதாக இதற்கு முன்னர் ஹரின் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.