துறைமுக நகரில் வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வெளியான தகவல்!

துறைமுக நகரில் வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வெளியான தகவல்!


கொழும்பு துறைமுக நகரின் முதலீட்டாளர்களுக்கு அங்குள்ள நிலத்தின் உரிமை கிடைக்காது என நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயலாளர் பியத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார்.


குத்தகை மூலம் கிடைக்கும் காணி பகுதியை மாத்திரம் பயன்படுத்தும் உரிமையே முதலீட்டாளர்களுக்கு இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.


இந்த விசேட பிராந்தியத்தில் டொலர் மூலமே கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறும் என்பதுடன் சம்பளமும் டொலர்களியே வழங்கப்படும்.


உலகம் முழுவதிலும் உள்ள விசேட பொருளாதார வலயங்களில் அந்நாடுகளின் நாணயத்தில் கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறுவதில்லை.


சர்வதேச நாணயங்களிலேயே அவை நடைபெற்று வருகின்றன எனவும் பியத் பந்து விக்ரம குறிப்பிட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.