பரீட்சை திணைக்களத்தை தனியார் மயப்படுத்தும் விடயம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் விளக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பரீட்சை திணைக்களத்தை தனியார் மயப்படுத்தும் விடயம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் விளக்கம்!


பரீட்சைகள் திணைக்களத்தை தனியார் மயப்படுத்துவதற்கான எவ்வித திட்டங்களும் இல்லையென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.


சமூக வலைத்தளங்களில் வௌியாகியுள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


நேற்றைய தினம் முதல் பரீட்சைகள் திணைக்களத்தை தனியார் மயப்படுத்தவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வௌியான செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையனெ பரீட்சைகள் ஆணையாளர் அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் பரீட்சை புள்ளிகளை கணினி மயப்படுத்தும் செயற்பாட்டில் எந்தவொரு தனியார் தரப்போ அல்லது தனியார் நிறுவனமோ தொடர்புபடவில்லையென  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், புள்ளிகளை கணினி மயப்படுத்தும் செயற்பாட்டில் தமது ஊழியர்கள் மாத்திரமே தொடர்புபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


கணினி மயப்படுத்தும் அனைத்து செயற்பாடுகளுடனும் பரீட்சைகள் திணைக்கள ஊழியர்கள் மாத்திரமே தொடர்புபட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.