கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் வைத்து கண்டி - அக்குறணை பகுதி இளைஞன் கைது!

கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் வைத்து கண்டி - அக்குறணை பகுதி இளைஞன் கைது!

akurana man arrested in vavuniya

வவுனியா - இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றினுள் வைத்து முஸ்லிம் இளைஞனொருவர் நேற்று (31) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கிறிஸ்தவர்களின் புனித வாரம் தற்போது அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் குறித்த ஆலயத்தில் இரவு வழிபாடு இடம்பெற்ற நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞனொருவர் தேவாலயத்தினுள் சென்றுள்ளார்.


அங்கிருந்தவர்கள் குறித்த இளைஞனை விசாரித்தபோது கண்டி - அக்குறணை பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞன் என தெரியவந்துள்ளது.


உடனடியாக அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post