தடுப்பூசி எடுத்துக்கொண்டு வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமா?

தடுப்பூசி எடுத்துக்கொண்டு வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமா?


நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தொடர்ந்து கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவர்களுக்கு 14 நாள் தனிமைப்படுத்தலை இலங்கை அரசு மீண்டும் விதித்திருந்தது.


வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பும் இலங்கையர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் காலம் 14 நாட்களாக  நீட்டிக்கப்படும் என்று கொரோனா தொற்று தடுப்புப்பிரிவின் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், வெளிநாடுகளின் இருந்து தடுப்பூசி போட்டுகொண்டு முறையான சான்றிதழுடன் நாடு திரும்புவர்களுக்கு இந்த 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலம் பொருந்தாது என தெரிவித்தார். 


-எம்.எம் அஹமட் 


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post