வீட்டைக் கேட்டு மின்கம்பம் மேல் ஏறிய மூன்று பிள்ளைகளின் தகப்பன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வீட்டைக் கேட்டு மின்கம்பம் மேல் ஏறிய மூன்று பிள்ளைகளின் தகப்பன்!

அரசினால் தனக்கு வீடு வழங்கப்பட வேண்டும் என கோரி மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையொருவர் உடம்பில் மண்​ணெண்ணையை ஊற்றி தீப்பெட்டியுடன் மின்கம்பத்தில் ஏறி சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடாத்தினார்.

இச்சம்பவம் அம்பாறையை அடுத்துள்ள வளத்தாப்பிட்டிக் கிராமத்தில் நேற்றுமுன்தினம் (10) இடம்பெற்றுள்ளது. இதனால் அங்கு சிலமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த சண்முகம் சந்திரகுமார் (வயது 40) என்பவரே இவ்விதம் மின்கம்பத்தில் ஏறி சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டவராவார்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயலத், சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் பாரீஸ், சமுர்த்தி தலைமை அலுவலக அதிகாரி சலீம், கிராமசேவை உத்தியோகத்தர் கே.ரவி, இராணுவம் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து அவரை இறக்குவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

அரச உத்தியோகத்தர்கள் கடமையை சரியாகச் செய்ய வேண்டும். தனக்கு ஓரு வீட்டினை அரசின் மூலம் பெற்றுக் கொடுக்க வேண்டும் அத்தோடு கிராம சேவகர் தனிப்பட்ட வீட்டில் அலுவலகத்தை அமைக்காமல் பொது இடத்தில் இருக்க வேண்டும் ,கிராம பொதுக் கட்டிடத்தில் கிராம சேவகர் மற்றும் சமுர்த்தி அலுவலகங்கள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே தான் இறங்குவதாக மேலிருந்து கூறினார். எதற்கும் இறங்குங்கள் என்று கூறியபோதிலும் அவர் செவிசாய்க்கவில்லை. அதனிடையே அவரது மனைவி 3பெண்பிள்ளைகள் கீழிருந்து அழுதுகொண்டு நின்றனர்.

பிரதானவீதி என்பதால் வாகனங்கள் சனக்கூட்டம் நிரம்பிவிட்டது. சம்மாந்துறை பிரதேசபையின் முன்னாள் உபதவிசாளரும் சு.கட்சி அமைப்பாளருமான வி.ஜெயச்சந்திரன் கலந்துகொண்டு முயற்சியெடுத்தார். சுமார் 4மணியளவில் மின்கம்பத்தில் ஏறியவர் 7.15வரை அங்கிருந்து தமது கோரிக்கையை முன்வைத்து இறங்காமல் அடம்பிடித்தார்.

பழையவளத்தாப்பிட்டி பதிய வளத்தாப்பிட்டி இஸ்மாயில்புரம் பழவெளி ஆகிய நான்கு கிராமங்களின் 1200குடும்பங்களை கவனிக்கவேண்டிய கிராம உத்தியோகத்தர் கே.ரவியின் முயற்சியால் வீடு பெற்றுத்தருவதாக உறுதியளித்தைத் தொடர்ந்து போராட்டம் இறுதிக் கட்டத்திற்கு வந்தது.

இறுதியில் வீடுதருவதாக கிராம சேவை உத்தியோகத்தர் கி.ரவி உறுதியளித்தன் பேரில் 7.15மணியளவில் கீழிறங்கினார்.

கீழிறங்கியதும் வீடு ஒன்று சமுர்த்திதிட்டத்தின்கீழ் பெற்றுத்தருவதாக கடிதம் எழுதி சமுர்த்தி தலைமையக அதிகாரி சலீம் ஒப்பமிட்டு சாட்சிக்கு இருவர் ஒப்பிமிட்டுக் கொடுத்தபின்னர் போராட்டம் முடிவுக்குவந்தது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.