குளியாப்பிட்டிய பிரதேசத்தில் சிலையை சேதப்படுத்திய இந்திய பிரஜை மரணம்!

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் சிலையை சேதப்படுத்திய இந்திய பிரஜை மரணம்!


குளியாப்பிட்டியவில் புத்தர் சிலையை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார்.

வாரியபொல சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை, நேற்றிரவு (05) திடீர் சுகயீனமடைந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

திலிப் குமார் என்றழைக்கப்படும் 37 வயதான இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பாதுகாப்பு நடைமுறைகளுடன் கூடிய வகையில் வாரியபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.