கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி ஹரின் மனுதாக்கல்!

கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி ஹரின் மனுதாக்கல்!


தான் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

2019 இல் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் பதிவு செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைத் தருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் ஹரின் பெர்ணான்டோ, தான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post